Ad 728x90

Sunday, July 8, 2018

மகுடத்தை வென்ற தினக்‌ஷி மற்றும் சனுத்ரி

மகுடத்தை வென்ற தினக்‌ஷி மற்றும் சனுத்ரி

தெரண பெயார் அன்ட் லவ்லி ஸ்டார் சிட்டி டுவன்டி டுவன்டி நிகழ்ச்சியின் வெற்றியாளர்களாக தினக்‌ஷி பிரியஷாத் மற்றும் சனுத்ரி பிரியஷாத் தெரிவு செய்யப்பட்டனர். 

இலங்கை தொலைகாட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் முதல்தர நிகழ்ச்சியாக தெரண தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று (07) இரவு மகரகம, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

6 மாத காலமாக நடைபெற்ற ஆரம்பகட்ட போட்டிகளுக்காக நடனம், நடிப்பு, பாடல் போன்ற பல்வேறு திறமைகளை வெளிகாட்டும் விதமாக 20 ஜோடிகள் பங்குபற்றி இருந்தன. 

அதில் மூன்று குழுக்கள் இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டதுடன் அவர்களில் ரொமேஷ் மற்றும் தீக்‌ஷன மூன்றாம் இடத்தையும், அஷான்தி மற்றும் ரன்தீர் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர். 

நடுவர்களினால் 40% புள்ளியும் மக்கள் வாக்குகளினால் 60% புள்ளியும் கணக்கில் எடுக்கப்பட்டு வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். 
படகு கவிழ்ந்ததில் நால்வரை காணவில்லை

படகு கவிழ்ந்ததில் நால்வரை காணவில்லை

அம்பாறை, தமண, எக்கல் ஓயாவில் படகு கவிழ்ந்ததில் நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 

இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாள்ர அலுவலகம் தெரிவிக்கின்றது. 

பதுள்ளை, கந்தன சிறிசீவலி வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர் குழு ஒன்று தமண பகுதிக்கு சுற்றலா சென்றிருந்த போது அதில் 9 பேர் படகு ஒன்றின் மூலம் எக்கல் ஓயாவில் பயணித்துள்ளனர். 

இதன்போது அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்தததை அடுத்து அருகில் இருந்த ஏனைய மீனவர்கள் முற்பட்ட ஐவரை காப்பாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

பாடசாலையின் அதிபர், ஆசிரியர் ஒருவர், அந்த பாடசலையின் காவளாலி மற்றும் 13 வயதுடைய மாணவன் ஒருவனுமே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 

காணாமல் போனவர்களை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.
புகையிரதத்துடன் மோதியதில் ஒருவர் பலி

புகையிரதத்துடன் மோதியதில் ஒருவர் பலி

ரத்கம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிள் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

புகையிரத கடவை மூடப்பட்டிருந்து சந்தர்ப்பத்தில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிள் காலியில் இருந்து மருதனை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றும் ஒருவர் பலத்த காயங்களுடன் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

புஸ்ஸ, பரணவத்த பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பில் ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நொச்சியாகம கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

நொச்சியாகம கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

நொச்சியாகம, வன்னியகுளம் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அநுராதபுரம், வன்னியகுளம் பகுதியை சேர்ந்த சுஜீவ பிரசன்ன குமார என்பவர் நேற்று முன்தினம் (06) பகல் இனம்தெரியாத குழு ஒன்றினால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யயப்பட்டார். 

இந்நிலையில் இவ்வாறு கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினருக்கும் கொலை முரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

கடந்த தினத்தில் திருமண நிகழ்வொன்றின் போது அப்பகுதியில் உள்ள பிரபல நபர் ஒருவர் மற்றும் அவரின் அடியாட்கள் மூலம் தமது மகளை நிர்வாணமாக்கியதாகவும் இதனால் கோபமடைந்த சுஜீவ அவர்களை தாக்கியுள்ளதாகவும் இதனை காரணமாக வைத்து பலி தீர்ப்பதற்காகவே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த சுஜீவவின் மனைவி தெரிவிக்கின்றார். 

சுஜீவவின் சடலம் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டுள்ளதுடன் குடும்பத்தினருக்கும் கொலை முரட்டல் விடுக்கப்படுவதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 

இவ்வாறான சூழ்நிலை காரணமாக சுஜீவவின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. 

சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை இனங்கண்டுள்ளதாக பொலிஸார் நேற்று தெரிவித்திருந்தனர். 

இந்நிலையிலேயே சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட மேலும் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபத்தில் பாதையில் நடந்து சென்ற முதியவர் பலி

விபத்தில் பாதையில் நடந்து சென்ற முதியவர் பலி


மெதவச்சிய - ஹொரவபத்தான பிரதான வீதியின் கனதரா திவுல்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

பாதை ஓரமாக நடந்து சென்ற ஒருவரை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தில் பலத்த காயமடைந்த நபரை மெதவச்சிய வைத்தியசாலைக்கு அனுமதித்து மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 

மெதவச்சிய பகுதியை சேர்ந்த 63 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் மெதவச்சிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.